25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)  பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் (CMCHIS)  கீழ் டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 20.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)  காலிப் பணியிடம் ஒன்று உள்ளது. அதற்கான கல்வித்தகுதி - Diploma in Dialysis Technician  பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஒப்பந்த ஊதியம் ரூ.12,000- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் என்ற முகவரிக்கு 20.05.2025 அன்று மாலை 05.45.மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News