தூதுவளை துவையல் .
தேவையானவை:தூதுவளை இலை - 2 கப்,புதினா -1 கப்,பூண்டு -4,இஞ்சி -1/2 இஞ்ச் ,சிறிய வெங்காயம் -10,சிவப்பு மிளகாய்-6,எண்ணெய் 2 டீஸ்பூன்,கடுகு-சிறிது,உளுத்தம் பருப்பு சிறிது,பெருங்காயம் சிறிது,புளி சிறிது,தேங்காய்-2 ஸ்பூன் துருவியது,உப்பு - தேவையான அளவு
செய்முறை:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ,அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும்,சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். பிறகு கடைசியாக தூதுவளை இலை ,புதினா இலை போட்டு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்தால் தூதுவளை துவையல் தயார்.
0
Leave a Reply