25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள் ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள் ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார்.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் நிலைதடுமாறி அந்தப் பெண்ணும் குழந்தைகளும் சாலையில் விழுந்தனர்.

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த வாகனங்கள் சமயோசிதமாக பிரேக் போட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் விழுந்த மூவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து அவர்களுக்கு உதவி செய்தனர்.

இத்தகைய பள்ளி நேரங்களில் ஏற்படும் சம்பவங்கள் நடப்பது குழந்தைகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஆபத்தாக முடியலாம் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *