25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


8 ரூபாயாக உயர்ந்த முட்டை விலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

8 ரூபாயாக உயர்ந்த முட்டை விலை.

முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், குளிர்காலம் என்பதால், தற்போது முட்டை உற்பத்தி 10 சதவீதம் சரிந்துள்ளது. முட்டை விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது புதியஉச்சமாக, நகரங்களில் 7 முதல் 7.10 ரூபாய் வரை யிலும், பிற இடங்களில் முட்டை விற்பனை சில்லரை விலை 8 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என விழாக் காலத்தில் ஏற்பட்ட விலை உயர்வால், கோழிப்பண்ணை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், ஏழை எளிய மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், முட்டை சாப்பிடுவதை டாக்டர்கள் பரிந்துரைப்பதால், அசை வம் சாப்பிடாதவர்கள் கூட, கோழி முட்டையை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். 

நாமக்கல்  மண்டலத்தில் உள்ள 1100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சத்துணவு திட்டம், உள்ளூர் மற்றும் அண்டை மாநில விற்பனை போக, மீதமுள்ள 35 முதல் 45 லட்சம் முட்டைகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி  செய்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News