25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உடனுக்குடன் காபி கலக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடனுக்குடன் காபி கலக்க....

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வரும், விருந்தாளிகளுக்காக, அடிக்கடி காபி கலக்க நேரிடும். அப்போது பாலை திரும்ப திரும்ப சுடவைத்து காபி கலக்கினால், பால் சீக்கிரம் சுண்டிவிடும். இரண்டு கேஸ் அடுப்புகளிலும் இரண்டு, பெரிய பாத்திரங்களில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் ஒன்றில் பாலும், மற்றொன்றில் காபி டிக்காஷன் உள்ள சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பை, 'சிம்'மில் வைத்து விடவும். பாலும், டிகாஷனும் எப்போதும் சூடாக இருக்கும். உடனுக்குடன் காபி கலக்கலாம்.

பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒரு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்தால் சூப்பரான அப்பளத் துவையல் ரெடி.

சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண் ணெய்யை சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு துண்டு தேங்காய் போட்டு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.

மோர்க்குழம்பு, கூட்டு ஆகியவற் றிக்கு தேங்காய் எண்ணெய்யில் தாளித்து கொட்டினால், மணமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News