25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: நீலம், காஜல் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: நீலம், காஜல் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவு போட்டிகள் நடைபெற்றன.

மகளிர் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நீலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் சுசாகியை எதிர்கொண்ட நீலம், 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

76 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் காஜல், உக்ரைனின் அல்பேயவா உடன் மோதினார். இதில் காஜல் 6-8 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் அன்ஷு மாலிக்கிற்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகள் என்ற பெருமையை நீலம் மற்றும் காஜல் பெற்றுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News