வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்.
தேவையான பொருட்கள்-
100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை,
1 வெங்காயம்,
1/4 தேக்கரண்டி கடுகு,
4 காய்ந்த மிளகாய்,
1/4 தேக்கரண்டி மிளகாய்,
1/4 இன்ச் இஞ்சி, தேவையானஅளவு உப்பு,
2 மேஜை கரண்டி துருவிய தேங்காய்,
செய்முறை -
இரவு முழுக்க ஊற வைத்த சுண்டலை குக்கரில் வேகவைத்து எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
வடசெட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு பொடியாக நறுக்கிய இஞ்சி ,கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ,சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
வேகவைத்து எடுத்த சுண்டலை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
0
Leave a Reply