25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சூரிய உதயத்துடன் தொடங்கும் மூவர்ணக் கொடி பயணம். இன்று ஆகஸ்ட் 15நாட்டின்  80 வது சுதந்திர தினத்தைக்கொண்டாடுகிறோம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூரிய உதயத்துடன் தொடங்கும் மூவர்ணக் கொடி பயணம். இன்று ஆகஸ்ட் 15நாட்டின் 80 வது சுதந்திர தினத்தைக்கொண்டாடுகிறோம்.

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘Surya Path Tiranga’ என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்களில், சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசையாக தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

பிஜி தீவுகளில் தொடங்கி, வெவ்வேறு நாடுகளின் நேர மண்டலங்களுக்கு ஏற்ப இந்தக் கொடியேற்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று அமெரிக்கா வரை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை உலகம் முழுவதும் ஒரே தொடர்ச்சியான நிகழ்வாகக் கொண்டுசெல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.இன்று ஆகஸ்ட் 15நாட்டின் 80 வது சுதந்திர தினத்தைக்கொண்டாடுகிறோம்.

இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது.பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி நேதாஜி, பகத்சிங் போன்ற பல தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்கள்.

தென்னகத்தில் வேலு நாச்சியார். பாரதியார் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல தலைவர்களும் மிக முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.

சுதந்திரதினம் அன்று. செங்கோட்டையில் மாண்புமிகு பிரதமர் கொடியேற்றுவார்

முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றி வணங்குவோம்.

போராடிப்  பெற்ற சுதந்திரத்தை பேணிக்  காப்போம்

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News