25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகின் டாப் 7 பணக்கார தலைவர்கள்,சொத்து மதிப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் டாப் 7 பணக்கார தலைவர்கள்,சொத்து மதிப்பு .

உலகின் பணக்கார தலைவர்களில் முதலிடத்தில் இருப்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவர் உலக அளவில் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான தலைவராக கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், 19 வீடுகளும்,700 கார்கள்,58 விமானம், ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடலில் மாளிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புருனே. இந்நாட்டின் சுல்தானாக ஹசனல் போல்கியா இருந்து வருகிறது. இவர் ஆடம்பரமான சொத்துக்கள், சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 50 பில்லியான் டாலர் ஆகும். இவரிடம் 7,000 கார்கள், 747 ஜெட் வைத்துள்ளார். மிகப்பெரிய அரண்மனையில் வசித்து வருகிறார். இவர் உலகின் பணக்கார தலைவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

உலகின் பணக்கார தலைவர்களில் மூன்றாம் இடத்தில் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உள்ளார். இவரின் சொத்து 30 பில்லியன் டாலர் ஆகும். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கிரீடம் ஒன்றையும் வைத்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நான்காவது பணக்காரராக அறியப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலர் ஆகும்.

ஐந்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இவர் உலகின் பிரபலமான தலைவராகவும் கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு 6.1 பில்லியன் டாலர் ஆகும்.

ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு1.5 பில்லியன் டாலராக உள்ளது. இவர் பல்வேறு இடங்களில் முதலீடுகளை செய்துள்ளார். மேலும், இவருக்கு தனியாக மாளிகை, சொகுசு கார்கள், ஜெட் போன்றவற்றையும் வைத்துள்ளராம்.

ஏழாவது இடத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News