தக்காளி தொக்கு (Tomato Thokku)
தேவையானவை:
தக்காளி -1 கிலோ (நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் -1/2கப்
புளி விழுது – சிறிது
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை :
நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸ்சியில்அரைத்துக் கொள்ளவும்.வாணலியில்1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு கருவேப்பிலை பெருங்காயம் வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும். இடையிடையே கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மீதமுள்ள. எண்ணெய் புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இருபது நிமிடங்கள் வேக விடவும் எண்ணெய் மிதந்து வரும் வரை வேக விட்டு இருக்கவும்.தக்காளி தொக்கு தயார்.
0
Leave a Reply