25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உடம்பில் உள்ள தேமல் மறைய
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடம்பில் உள்ள தேமல் மறைய

உணவில் அதிக அளவில் கசப்பு மற்றும் இனிப்பு வகைகளை தவிர்க்கவேண்டும்.வெந்தயம்,கருவேப்பிலை இரண்டும் சேர்த்து பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தேமல் மறையும்.கருஞ்சீரகத்தை பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.பாசிபருப்பு மாவுடன் வெட்டிவேர் கோரைக்கிழங்கு,வேப்பிலை சேர்த்து அரைத்து குளித்து வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

.அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள்,மருதோன்றி  போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும்..

 கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும். 

நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில்  கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும்.

 எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும். எலுமிச்சை சாராய் தேமல்உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் பிறகு கழுவவேண்டும்

 மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News