பல ஆண்டுகளாக தூர்வாராத சஞ்சீவி மலை நீர்வரத்து ஓடை
ராஜபாளையம் நகரின் நடுவே அமைந்துள்ளது சஞ்சீவி மலை. மழைக் காலங்களில் இதில் உருவாகும் நீர்வரத்து ஓடைகள் வழியே நகரின் பல்வேறு ஊருணிகளை நிரப்பி அருகருகே உள்ள கண்மாய்களுக்கு சென்று சேரும் வகையில் நீர்வரத்து உள்ளது.
இந்நிலையில் மலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதிகுளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை அம்பலபுளி பஜார் குடியிருப்புகள் வழியே சென்று சேர்கிறது.10 ஆண்டுகளுக்கும் மேல் பிரதான நீர் ஓடைசிறிதுசிறிதாகஆக்கிரமிப்பிற்குள்ளானதுடன் முறையாக துார்வாரும் பணி நடைபெறவில்லை.இதனால் ஓடை முழுவதும் மண் மேவி புதர்களாக வளர்ந்து நீர்வரத்திற்கு தடை ஏற்படுத்தி வருகிறது.
தொடர் மழையால் கண்மாய்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளன. இந்நிலையில் ராஜபாளையம் கடம்பன் குளம் கண்மாய் பிரதான ஷட்டர்களுடன் பாதுகாப்புக்கான உபரி நீர் வெளியேறும் ஷட்டர்கள் சேதமாகி வீணாகி வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு கூட தாங்காது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கோடை வரை காத்திருக்க கூறுகின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். ஒவ்வொரு வருடமும் இதே நிலை நீடிக்கிறது. ஓடைமுறையாகதுார்வாரவும், சேதமான ஷட்டர்களை சரிசெய்யவும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
0
Leave a Reply