25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடத்திற்கான உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடத்திற்கான உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டு 30.08.2025 அன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

அனைத்து வயதினரின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்திடும் நோக்கத்துடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முலம் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை  பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உறுப்பினர் சந்தா கட்டண விவரங்கள் தலைமையலுவலகத்தினால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 01.09.2026-இல் இருந்து உறுப்பினர் சந்தா கட்டணம் 1 மாதத்திற்கான தவணை முறை கட்டணமாக ரூ.525/-, 3 மாதங்களுக்கான தவணை முறை கட்டணமாக ரூ.1260/-, 6 மாதங்களுக்கான கட்டணமாக ரூ.2310/-, 1 வருடத்திற்கான கட்டணமாக ரூ.4410/-ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளரைக் கொண்டு உடற்பயிற்சி கூடமானது செயல்பட்டு வருகின்றது. மேலும், நவீன உடற்பயிற்சி கூடத்தினைப் பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையில் 50% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துளாளர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News