25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.

லோடு ஆட்டோ, கார், பயணிகள் ஆட்டோ, ஜெராக்ஸ் கடை, வெல்டிங், சென்ட்ரிங், டிபார்மென்ட் ஸ்டோர், கார்மென்ட்ஸ், அரிசிகடை, ஆவின் பாலகம், எலெக்ட்ரிக்கல்ஸ், பிரவுசிங் சென்டர், பியூட்டி பார்லர் மற்றும் பிற தொழில்கள் இதுபோன்ற வெற்றி தொழில் முனைவோர் திட்டத்தில் திட்ட மதிப்பு தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.

மேலும், ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டத்தில் (PM-AJAY) ஆடு மற்றும் மாடு வளர்ப்பதற்கு திட்ட மதிப்பு தொகையில் 50% அல்லது ரூ.50,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% வட்டி மானியமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதள முகவரியில் (https://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து        இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News