25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நெடுஞ்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெடுஞ்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சூலக்கரை வரை நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, I A S., அவர்கள் (17.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 744-இல் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரி முதல் இராஜபாளையம் வரையிலான சாலைப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, வழிவிடு முருகன் கோவில், மூவரைவென்றான் பகுதிகளில் கைவிடப்பட்ட பழைய சாலைகள், கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான சுமார் 26.685 கிலோமீட்டர் நீளமுள்ள பழைய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, ஒப்படைக்கப்படவுள்ள பழைய சாலைகளின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள், சாலைப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் தடையின்றிப் பாதுகாப்பாகப் பயணிப்பதற்குத் தேவையான வசதிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சூலக்கரையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணிகளை சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி குறித்த காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நெடுஞ்சாலையோரப் பகுதிகளில் சிலர் குப்பைகள் மற்றும் கழிவுநீரைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதால், இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News