25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தகவல்.

விருதுநகர்,  மாவட்ட   வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையத்தின்  ஒவ்வொரு  மாதமும்   சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன்படி , படித்த   வேலை  தேடும்  இளைஞர்களுக்காக  வரும் 17.07.2026 அன்று   வெள்ளிக்கிழமை   காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை   வேலைவாய்ப்பு  முகாம்,  விருதுநகர்   சூலக்கரையில்  உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு   மற்றும்   தொழில்நெறி   வழிகாட்டும்  மையத்தில்   நடைபெறவுள்ளது.

                  இத்தனியார்   வேலைவாய்ப்பு  முகாமில்    20 -க்கும் மேற்பட்ட  பிரபல   முன்னணி  நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு;  I.T.I. . டிப்ளமோ   மற்றும்  பொறியியல்  படிப்பு  ஆகிய  கல்வித்  தகுதி உடைய   பணியாளர்களை   தெரிவு  செய்யவுள்ளார்கள்.  இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்த   விரும்பும் வேலைநாடுநர்கள் 17.07.2026  அன்று  வேலைவாய்ப்பு  முகாமில் கலந்து  கொள்வதற்கு  முன்பாக www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில்   தங்களது சுய  விவரங்களை  பதிவு  செய்துவிட்டு  சுய விவரச் சான்றிதழ்  (RESUME)> அனைத்து   கல்விச்சான்றிதழ்,   ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும்  இச்சேவையானது   முற்றிலும்   கட்டணமில்லா சேவையாகும்.

              இம்முகாமில்  கலந்து    கொள்ள  விரும்பும்  தனியார்  துறை  நிறுவனங்கள் விருதுநகர்  மாவட்ட  வேலைவாய்ப்பு  அலுவலகத்திற்கு  நேரில்  வருகை  புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு   அலுவலர்  அவர்களை  நேரிலோ  அல்லது vnrjobfair@gmail.comஎன்ற மின்னஞ்சல்  வாயிலாக  தொடர்பு  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம்  மூலம்  பணிநியமனம்  பெறுபவர்களது வேலைவாய்ப்பு   அலுவலக  பதிவு  மூப்பு  எவ்விதத்திலும்  பாதிக்கப்படாது  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News