25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழக வீரர் இனியன் பன்னீர்செல்வம்  காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக வீரர் இனியன் பன்னீர்செல்வம் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றார்.

 இலங்கையில் நடந்தகாமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஆகிய 3 வடிவங்களில் ,ஓபன் பிரிவில் 96 பேர் பங்கேற்றனர். இதன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன்  பன்னீர்செல்வம் 7-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் 6½ புள்ளிகள்பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் ஸ்ரீஹரி  ரேபிட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மித்ரபா வெண்கலப் பதக்கமும், பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா வெள்ளிப்பதக்கமும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News