25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வலிமை தரும் வைட்டமின்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வலிமை தரும் வைட்டமின்கள்.

மனித உடலின் வலிமைக்கு வைட்டமின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில், வைட்டமின்-டி மிகவும் முக்கியமானது. இது சூரிய ஒளி வைட்டமின், கால்சிய வைட்டமின், ரிக்கெட் தடுப்பு வைட்டமின் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உடலை தாங்கி நிற்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின்-டி அவசியம். இது எலும்பின் வளர்ச்சிக்கு உதவுவதோடு பலவித எலும்பு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இரைப்பை உணவு பாதையில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது. இது உடலில் குறையும்போது குழந்தையின் கால்கள் மெலிந்து, மார்பு எலும்பு கூடு போன்று குறுகி காணப்படும். கால் மூட்டுகள் ஒடுங்கி நடை, ஓடும் வேகம் குறையும். உடல் இணைப்பு எலும்புகளின் முனைகள் அகன்று, இடுப்பு எலும்பு பரப்பு குறைந்தும் காணப்படும். இந்த வைட்டமின் குறைந்தவர்களின் கால்களின் உறுதித்தன்மை குறையும்.

வெயில் உடலில் படும்போது தோல் தானாகவே வைட்ட மின்-டியை உற்பத்தி செய்கிறது. வெயிலில் செல்லாத குழந்தைகள், சிறுவர்களிடையே இந்த வைட்டமின் குறைந்து காணப்பட இதுவும் ஒரு காரணம். விலங்குக ளின் ஈரல், முட்டை மஞ்சள் கரு, பால், பால் புரதங்கள். வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின்-டி காணப்படு கிறது. மாலை நேரங்களில் சூரிய வெப்பம் குறைவாக இருக்கும். எனவே அப்போது வெளியே சென்றால், உடலுக்கு ஓரளவு வைட்டமின்-டி கிடைக்கும். எனவே இந்த வெயிலை தவற விடக்கூடாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News