25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேர்தல் மை அழியாமல் இருக்க காரணங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் மை அழியாமல் இருக்க காரணங்கள்.

தேர்தலில் வாக்களிப்பவர்  வாக்களித்ததை உறுதிசெய்வதற்காக இடது கை ஆள்காட்டி விரலில் மை ஒன்று வைப்பார்கள். அது சில வாரங்கள் அழியாமல் இருக்கும். அது என் உடனடியாக அழிவதில்லை? காரணங்கள் என்ன ?

இந்தியாவில்தேர்தல்மை பயன்படுத்தும்முறை 1962ம்ஆண்டுமக்களவைத்தேர்தலின்போதுமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது விரலில் மை அழியாமல் இருக்க முக்கிய காரணம்.மையில் உள்ள சில்வர் நைட்ரேட் (AgNO 3) என்ற வேதிப்பொருள் தான், இந்த மையை விரலில்வைக்கும்போது, அது தோலில்உள்ளஉப்புச்சத்துமற்றும்ஈரப்பதத்துடன்வினைபுரிந்து,சூரியஒளி படும்போது, சில்வர் நைட்ரேட் சில்வர் குளோரைடாக மாறி தோலுடன் மிகக் கடுமையாக ஒட்டிக்கொள்கிறது. 

இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாது. சோப்பு, ஆல்கஹால் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினாலும் இந்த மை எளிதில் அழியாது. இந்த மை தோலின் மேற்பகுதியில் மட்டும் இல்லாமல், நகம் மற்றும் தோலுக்கு இடையில் உள்ள பகுதியில் ஊடுருவிச் செல்கிறது. நகம் வளர்ந்து பழைய தோல் செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை சுமார் 2 முதல் 4 வாரங்கள் இந்த மை நீடிக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த அழியாத மை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News