இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், முப்பெரும் விழா சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (10.07.2025) நடைபெற்றது.இவ்விழாவில் கடந்த கல்வியாண்டில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
குழந்தைகள் கல்வி கற்பதனால் அந்த குடும்பமே முன்னேற்றம் அடைகிறது. அதோடு நாம் படிக்கும் படிப்பு நமக்கு மட்டுமல்லாமல், அந்த ஊருக்கே பெருமையளிப்பதாக இருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.மேலும் நல்ல ஒரு சமுதாயம் உருவாக அரசின் செயல்பாடுகளோடு, பொதுமக்கள் மற்றும் சமூகத்தை சார்ந்தவர்கள்; அனைவரின் ஒத்துழைப்போடு நாம் செயல்பட்டால் அது மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கும்.
மாணவர்கள் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் பிற்காலத்தில் கற்றதின் பயனாக தங்களுடைய பெயர் நிலைத்திருக்கும் வகையில் எந்த துறையிலாவது சாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply