நகர்ப்புற வளர்ச்சிக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேர தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தி, தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பகுதிகளில் பல்லுயிர் மற்றும் சூழலியல் பூங்காக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தேவைக்கேற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
0
Leave a Reply