25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நவராத்திரி விரதம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நவராத்திரி விரதம்

நவம் என்றால், ஒன்பது என்று பொருள். ஒன்பது இரவுகள் அம்பிகையை,பல வடிவங்களில் பூஜை செய்து, அவளின் அருளைப் பெற்று, 10ம் நாள் வெற்றித் திருநாளாக அதாவது, விஜயதசமியாக கொண்டாடுவர். புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்மனுடைய கோரைப் பற்கள் எனவும், ஜீவ ராசிகள் அவற்றில் கடிபடாமல் இருக்க, நவராத்திரி பூஜையைமேற்கொள்ள வேண்டும் என்று, 'அக்கினி புராணம்' கூறுகிறது.

முதலில், பார்வதி தேவியாக மூன்று நாட்களும், லட்சுமி தேவியாக மூன்றுநாட்களும், சரஸ்வதி தேவியாக, மூன்று நாட்களும் வழிபட்டு, பத்தாம் நாள். அனைத்து அம்சங்களும் பொருந்திய மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றனர்.

பணி நிமித்தமாக, நவராத்திரி பூஜையை செய்ய முடியாத பெண்கள், ஒன்பது நாட்களில் கடைசியாக வரும், சப்தமி, அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்து, பூரண நற்பலன்களைப் பெறலாம்.இதுவும் முடியாத செயல் என்றால், நவமி அன்று ஒருநாள், சரஸ்வதி பூஜையுடன் வழிபாடு செய்து விடலாம். இப்படிச் செய்வதால் வாழ்வில் தன வளமும், தேவி தரிசனமும் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News