25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தேசிய டேபிள் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு மணிகா, ஸ்ரீஜா முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய டேபிள் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு மணிகா, ஸ்ரீஜா முன்னேற்றம்.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்ற தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஸ்ரீஜா அகுலா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) அணிக்காக விளையாடிய ஸ்ரீஜா அகுலா, கர்நாடகாவின் வன்ஷிகா தேஷனாவை 12-10, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இரண்டாவது சுற்றில் பெங்காலைச் சேர்ந்த சான்வி ராயை 11-4, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதையடுத்து மூன்றாவது சுற்றில் ஸ்ரீஜா, சிண்ட்ரெலா தாஸை எதிர்கொள்கிறார்.

மணிகா பத்ராவும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (பி.எஸ்.பி.பி.) அணிக்காகக் களமிறங்கிய மணிகா பத்ரா, முதல் சுற்றில் கனரா வங்கியின் மரியா ரோனியை 16-14, 11-2, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் வென்றார்.

இரண்டாவது சுற்றில் இந்திய உணவுக் கழகத்தின் (எப்.சி.ஐ.) தனுஜாவை 6-11, 11-5, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன் மூலம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய மணிகா பத்ரா, அடுத்த போட்டியில் தியா சிடாலேவை எதிர்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News