.மீல் மேக்கர் மிளகு வறுவல்.
.தேவையான பொருட்கள் :
50 கிராம்மீல்மேக்கர்,சீரகம், ஒரு ஸ்பூன்சோம்பு,
சிறிதளவு கருவேப்பிலை,வர மிளகாய்,
1பெரிய வெங்காயம்,1பெரிய தக்காளி,
சிறிதளவுஉப்பு,1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்,
1ஸ்பூன்மல்லித்தூள்,1/2 ஸ்பூன்மிளகாய் தூள்,
1 ஸ்பூன்கரம் மசாலா தூள்,1 ஸ்பூன்மிளகு தூள்,
1 ஸ்பூன்தேங்காய் துருவல்,தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை-
ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர் சூடான தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்க
வேண்டும். ஊறியதும் நன்றாக பிழிந்து வைத்து கொள்ளவும்.
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், சோம்பு, கருவேப்பிலை ,வர மிளகாய் சேர்த்து
வதக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள், வர மல்லி தூள், மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் ,சோயா சேர்த்து
கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேக விடவும்.
வெந்ததும் 1 ஸ்பூன் மிளகு தூள், 2 ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து
கலந்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது சுவையான மீல் மேக்கர் மிளகு வறுவல் தயார்.
0
Leave a Reply