25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


4 சூப்பர் ஸ்டார்களுடன் இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

4 சூப்பர் ஸ்டார்களுடன் இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம்

இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பமாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான்.  அல்லு-கொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம் இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.அந்தவகையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்களை வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர்.இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது

இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, கபூர்கள் மற்றும் அக்கினேனிகளை காட்டிலும் அதிகமாகும். இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்.தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான்.  அல்லு-கொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்ற அழைக்கப்படும் அல்லு- கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகம். இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாகும்.தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான அல்லு ராமலிங்கய்யாவால்1950ல் மெகா குடும்பம் உருவானது.அவருடைய பிள்ளைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இந்த குடும்பம் வலுவாக தடம்பதித்தது. அல்லு ராமலிங்கய்யாவின4 பிள்ளைகளில், அரவிந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவீயை மணந்தார்.

அல்லு ராமலிங்கய்யாவின் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் அவர்களது வாரிசுகள் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு பல நட்சத்திரங்கள் .உதாரணமாக ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு, வருண் தேஜ் சாய் தரம் தேஜ் மற்றும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்தனர்.இந்த கூட்டு குடும்பத்தின் மொத்த கணக்கில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் பங்களிப்பு பெரியது. மெகா குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பை மொத்தமாக பார்த்தால் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக உள்ளது.தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான். அல்லுகொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்., கீதா ஆர்ட்ஸ், அஞ்சனா புரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ், கொனிடேலா புரொக்டக்ஷன்ஸ் கம்பெனி உள்பட5 திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அல்லு ஸ்டுடியோ ஆகியன உள்ளன. மேலும் இந்த குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்களும் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News