25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

நகர் பகுதியில் உள்ள ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்கள், தள்ளு வண்டி கடைகள், டீ, இறைச்சி, பூக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும். ஆரம்பத்தில் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழை இலை உபயோகம், பொருட்கள் வாங்க வருபவர்கள் துணி பை கொண்டு வருவது என மாற்றத்தை காண முடிந்தது. கால் நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எமனாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்  என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  

விவசாய தோப்புகளில்  தாழ்ந்து செல்லும் மின் வயர்களால் விவசாயிகள் கவலை. 

பலரது விவசாய தோப்புகளிலும் மின்வயர்கள் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மின் வயர்களை உயர்த்தி அமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் பணிகளில் வேகம் இல்லை. குடியிருப்பு பகு திகளில் பிரச்னை எனில் உடனடியாக மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கும் சூழலில் வனப்பகுதி ஒட்டிய தோப்புகளில் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் மிகுந்த தாமதத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் யானைகள் தொந்தரவு இருக்கும் நேரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு போன்ற சூழலில் தாழ்ந்து செல்லும் மின்வயர்களால் யானைகள் மீது உரசி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மின் வாரியத்தினர் மின் வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News