25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 11.08.2026  மற்றும் 12.08.2026 ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் 6 மதுபான கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 11.08.2026 மற்றும் 12.08.2026 ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் 6 மதுபான கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (F.L -1), F.L -2  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,  1981-ன்படி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 11.08.2026  மற்றும் 12.08.2026  ஆகிய இரண்டு தினங்களில் வத்திராயிருப்பில் உள்ள மதுபானக் கடை எண் 11872, மகாராஜாபுரம் கடை எண் 12022, வத்திராயிருப்பு ஹர்சினி ரெக்ரேசன் கிளப் மற்றும் ஜெயம் ரெக்ரேசன் கிளப், மகாராஜாபுரம் குயின் ரெக்ரேசன் கிளப் மற்றும் கூமாபட்டியில் உள்ள அயோத்தி ரெக்ரேசன் கிளப் ஆகிய 6 அரசு மதுபான கடைகள் மற்றும் ரெக்ரேசன் கிளப் ஆகிய கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

மேலும், உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், (F.L -1), F.L -2  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,  1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News