பொரி உருண்டை.
தேவையான பொருட்கள்-
1 படிபொரி
2 கட்டி வெல்லம்
ஏலக்காய்
2 ஸ்பூன் எள்
4 ஸ்பூன் தேங்காய் பல்
செய்முறை
முதலில் எள்ளை வறுக்கவும். அடுத்து தேங்காய் பல் போட்டு வதக்கவும். அடுத்து பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், கரைந்தவுடன் வடிகட்டவும். பிறகு பாகு காய்ச்சவும். பாகு பதம் வர வேண்டும்,
அடுத்து பாகில் பொரி, எள், தேங்காய், ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.
பிறகு மிதமான தீயில் வைத்தே உருண்டை பிடிக்கவும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஸ்னாக்ஸ் ரெடி.
0
Leave a Reply