25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சீன கப்பல்உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலாக 'எவர் கிரீன்' குறிப்பிடப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீன கப்பல்உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலாக 'எவர் கிரீன்' குறிப்பிடப்படுகிறது.

உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் சர்வதேசகடல்சார் அமைப்பின் தகவலின்படி, கடல் போக்குவரத்து மூலம் தான் நடைபெறுகிறது. பொம்மைகள் முதல் கனிமங்கள், நிலக்கரி, பெட்ரோல் வரை அனைத்து வகையான பொருட்களையும் கொண்டு செல்கின்றன. ஒரு கப்பல் எந்த வகையான பொருட்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்படுகிறதோ அதனை பொறுத்து கொள்கலன் கப்பல், ரோ ரோ கப்பல், மொத்த கேரி எண்ணெய் டேங்கர் என்றபெயர்களில் அழைக்கப்படுகின்றன.

'எவர் கிரீன்' சீன கப்பல் கட்டும் குழுவின் தயாரிப்பான இது 400 மீட்டர் நீளமும், 61,50 மீட்டர் அகலமும் கொண்டது. ஏறக் கு றைய, நான்கு கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரியது. உலகின் 2-வது பெரிய கப்பலான அல்ஜெசிராஸ் சுமார் 400 மீட்டர் நீளமும், 61 மீட்டர் அகலமும் கொண்டது. 3-வதாக புதிய தரைக்கடல் கப்பல் கட்டும் நிறுவன தயாரிப்பான எம். .சி. குல்சுன், எம்.எஸ்.சி. மினா ஆகியவை பிரபலமான சரக்குக் கப்பல்கள் ஆகும். இதில் எந்த வகையான குளிர்சாதன  உணவு, மருந்துகளையும் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல தயாரிக்கப்பட்ட தனித்துவமான கப்பலாக உள்ளது.

 பயணி கள் கப்பலை பொறுத்தவரை உலக அளவில் 'குயின்மேரி  " ரக கப்பல்கள் பெயர் பெற்றவை. குயின் மேரி 2,345 மீட்டர் நீளம்  கொண்டது. பயணிகள் மற்றும் சரக்கு கப்பலாக இருந்து, பின் னர் உலகின் அதிநவீன பயணிகள் சொகுசு கப்பலாகவும் மாறியது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். உலகில்  பல்வேறு கப்பல்கள் இருந்தாலும், குயின் மேரி மட்டுமே செல்லப் பிராணிகளுடன் பயணிக்கும் ஒரே கப்பலாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News