25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பாதிப்பு நீர் நிலைகளில் அடைப்பு .ஓட்டல்களில் விதிமீறல்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பாதிப்பு நீர் நிலைகளில் அடைப்பு .ஓட்டல்களில் விதிமீறல்கள்.

ராஜபாளையத்தில் அதிக அளவில் தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட், டீ கடைகளில் உணவுப் பொருட்களில் பயன்ப டுத்த தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக், பயன் படுத்தப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் தயாரிக்கப் பட்ட உணவுகள் நடை முறையில் உள்ளன.

ராஜபாளையம், சுற்றுப் பகுதிகளில் செயல்படும் உணவு பொருள் விற்பனை கடைகளில் விதிமுறைமீறி பிளாஸ்டிக் பொருட்களை பார்சலுக்கு உபயோகப் படுத்துவதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி சுகாதார விதிமுறைகள் பின்பற்றாது காற்றில் பறக்கும் நிலையில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் உள்ளிட்ட ,பிளாஸ்டிக் பொருட்கள் வாழை இலைக்கு பதில் பார்சல் மற்றும் உணவு பரிமாறுவதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓட்டல்களில் குழம்புகளை, டீக்கடையில் கூட பிளாஸ்டிக் கவர்களிலும், கொதிநிலையில் கட்டி கொடுக்கின்றனர். இது தவிர பதப்படுத்தப்பட்ட இறைச்சியும், தடை செய்யப்பட்ட நிறமிகளும், மசாலாக்கள், உபயோகப்படுத்திய எண்ணெய் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது.

பூ, இறைச்சி, ஓட்டல்களில் எந்த தடையும் இன்றி பிளாஸ்டிக் கவர்களில்பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பாதிப்பு நீர் நிலைகளில் அடைப்பு போன்ற சிக்கல் ஏற்படுத்துவதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News