25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைகிறது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைகிறது .

சமீபத்தில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் நுழைவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் நுழைய இருப்பதாகவும், இதற்கான ஆட்களை தேர்வு செய்யும் விளம்பரம் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பு சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், 5 வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையில் பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ள பணிகளுக்கு மும்பையில் பணியாற்ற வேண்டும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே, மும்பை மற்றும் டெல்லியில் தான் டெஸ்லா நிறுவனம் காலடி வைக்க உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News