25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் அல்சர் குணமாகும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் அல்சர் குணமாகும்

முட்டைகோஸில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.

முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், கல் உப்பு, எலுமிச்சம் சாறு, மிளகுதூள், புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளதால், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கப் பயன்படுகிறது.

அல்சர் உள்ளோர், முட்டைகோஸ் தண்ணீர் அருந்தி வருவதால், விரைவில் குணமாகும். மேலும் இது வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

முட்டைகோஸ் ஜூசில் அதிகப்படியான, 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.

முட்டைகோஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் இருக்க உதவும். மருகரும்புள்ளிகள், பருக்கள் போன்ற சரும பிரச்னைகளுக்கு, நல்ல பலன் தரும்.

சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News