25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கோடைக்கு ஏற்ற வெள்ளரிக்காய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடைக்கு ஏற்ற வெள்ளரிக்காய்.

வெள்ளரிக்காய்கோடைக்கு இயற்கை கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்று.வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவில் இருக்கும் வெள்ளரிக்காயில், கொழுப்பு சத்து மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதிகளவில் தண்ணீர் சத்து இருப்பதால், உடல் உஷ்ணத்தை நீக்கி, குளிர வைக்கிறது.

கோடை காலத்தில் ஏற்படும் தாகம், வறட்சி போன்றவற்றையும், வயிற்று உபாதைகளையும் போக்கும். வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவது தான் சிறந்தது. வெள்ளரிக்காயை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால்,உடலின் நிறம் மாறும்.

கோடை காலத்தில் முகத்தில் தோன்றும் முகப்பரு மற்றும் சிறு வேனல் கட்டிகள் போன்றவற்றை வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் சென்றதும், நீரால் கழுவினாலே போதும். அவை உதிர்ந்து விடும்.

தோல் சீவாமல், வெள்ளரிக்காயை வட்டமான வில்லைகள் செய்து, ஒரு வில்லையின் மேல் தக்காளி அதன் மேல் ஒரு வில்லை வெங்காயம் வைத்து, மிளகுத்துகளையும் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிக்காயை பச்சையாக தோலோடு உண்பது தான் பலன் தரும்.

பிஞ்சு வெள்ளரிக்காயாக பார்த்து வாங்க வேண்டும். கோடை காலத்தில் வியர்வை வெளியேறி நாம் சோர்வாக இருக்கும் போது, ஒரு வெள்ளரி பிஞ்சை சாப்பிட்டாலே போதும், இழந்த சக்தியை மீட்டெடுக்கலாம்.

வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். கோடைக்கு மிகவும் குளுமை தரும்.குறைந்த விலையில் கிடைத்தாலும், கோடைக்கு ஏற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News