சுண்டைக்காய் துவையல்.
தேவையான பொருட்கள் :- சுண்டைக்காய்1 சிறிய கப்(200 கிராம்), வத்தல்5, நெய் அல்லது கடலை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பல்லாரி அரை கப் பொடியாக நறுக்கியது. கருவேப்பிலை சிறிதளவு, புளி தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை :- சுண்டைக்காயை கல்லில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு இடித்த சுண்டைக்காயை வறுக்கவும்.17 நிமிடங்கள் மீடியம் பிளேமில் வைத்து வதக்கி தனியாக வைக்கவும், கடலை பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, வத்தல், சீரகம் அரை டீஸ்பூன் போட்டு, பொடியாக நறுக்கிய பல்லாரி ,கருவேப்பிலை, பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் சுண்டைக்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். ருசியான சுண்டைக்காய் துவையல், சாதம், இட்லி, தோசைக்கு, சைட்டிஷ்.
0
Leave a Reply