25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.காலிஃபிளவர்  கிரேவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.காலிஃபிளவர்  கிரேவி.

தேவையான பொருட்கள் 

காலிபிளவர் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கி, வேகவைத்தது),வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2-3 (கீறியது),மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப),மல்லித் தூள் - 1 டீஸ்பூன்,கரம் மசாலா தூள் -  அரை டீஸ்பூன்,

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன் ,கடுகு, உளுந்து – தாளிக்க,

கறிவேப்பிலை – சிறிதளவு,உப்பு - தேவையான அளவு,கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க 

செய்முறை 

காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து5-7 நிமிடங்கள் வேகவைத்து, தண்ணீரை வடித்து 

தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரைவதக்கவும்.இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

வேகவைத்த காலிபிளவர் துண்டுகளையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும். கிரேவிக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள் சேர்த்து, 5-10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கிரேவி கெட்டியானதும், கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும். சுவையான காலிபிளவர் கிரேவி தயார். இதனை சப்பாத்தி, 

பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News