அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை தோப்புகளில் யானைகள் புகுந்து சேதம் விவசாயிகள் பரிதவிப்பு.
புல்பத்திமலை அருகே முகாமிட்டு அனுமன் கோயில் வரை தோப்புகளில் யானைகள் புகுந்து பெரிய தென்னை மரங்களை சாய்த்தும் 60 க்கும் அதிகமான இளம் தென்னங் கன்றுகளின் குருத்துகளை பிடுங்கியும் உள்ளன. அத்துடன் வாழை, மா மரங்களையும், மின்வேலி, தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளது.அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை அமைந்துள்ளது. இதன் அருகே நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட சாகுபடி நடைபெறுகிறது.
ஓடை வழியாக நுழைந்து மின் வேலியையும் உடைத்து, ஆண்டு கணக்கில் பாதுகாத்து வளர்த்த மரங்களை, யானைகள் புகுந்து ஒரே இரவில் சேதப்படுத்தியதால் ,பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மா மர சீசன் தொடங்க உள்ள நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்..
0
Leave a Reply