தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்-2026 முன்னிட்டு தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்-2026 முன்னிட்டு நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் (30.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியில் விருதுநகர் அரசு செவிலியர் கல்லூரி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டு தேசபந்து மைதானத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.முன்னதாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply