25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் அகத்திக் கீரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் அகத்திக் கீரை.

அகத்திக் கீரை, மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பித்தம், தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை இந்தக் கீரைக்கு உண்டு. இந்தக் கீரை அதிக உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். லேசாகக் கசக்கும் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், குடல் புழுக்களை அழிக்கவும் துணைபுரியும். இந்தக் கீரையை அளவாகச் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்துடன் வாழலாம். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் பேதி ஏற்படும். புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை இதில் அதிகமாக இருக்கின்றன.

அகத்திக்கீரையுடன்சின்னவெங்காயத்தைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து குடித்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும். ஜீரண சக்தியை

அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை உண்டால், உடலின் உஷ்ணம் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும், மாலைக்கண் நோய் குணமாகும்.

வாயுக்கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதை நன்றாக வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும். கீரையின் நிறம் மாறும் அளவு சமைக்க வேண்டும். 'முருங்கை கீரை வெந்து கெட்டது, அகத்திக் கீரை வேகாமல் கெட்டது' என்பார்கள்.

பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக்கூடாது. அதோடு, கீரை உணவை இரவில் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாகச் செரிக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News