25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம் கண்மாய்களில் ஆகாய தாமரைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் கண்மாய்களில் ஆகாய தாமரைகள்.

இராஜபாளையம் சுற்றியுள்ள புளியங்குளம், பிரண்டைகுளம், கடம்பன்குளம், பெரியாதி குளம், கொண்டனேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களும் நகரில் உள்ள ஊருணிகளும்,  ஆகாய தாமரை பாதிப்பில் சிக்கி உள்ளன.

இராஜபாளையம் மலையொட்டிய பகுதிகளில் இருந்து உருவாகும் நீர் சுற்றுப்பகுதி கண்மாய்கள் முதல் மழைக்கு நீர் இருப்பை பெற்று விடும். நகர்பகுதி ஒட்டி உள்ளதால் கண்மாய்களில் குடியிருப்புகளிள் கழிவு நீர் என்று கலந்து விடுகிறது. இதனால் கழிவு நீரில் வேகமாக வளரும் ஆகாய தாமரை செழித்து வளர்வதுடன் நீர்படிப்பு பகுதிகளை ஆக்கிரமித்த வளர்ந்து விடுகிறது.

இதன் காரணமாக தண்ணீர் வரும்போது பாசத்திற்கான கொள்ளளவு குறைந்து பாதிப்பு ஏற்படுத்துவதுடன் நீர்வற்றும் காலங்களில் மடைகள் வழியே பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற வழி இன்றி அடைப்பு ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு சிக்கலை எற்படுத்தி வரும் ஆகாயத்தாமரையை நிரந்தரமாக அகற்றும் வழிமுறையை மேற்கொள்ள வேண்டி விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News