25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தேனடையில் கை  வைத்தாலும்கொட்டி துன்பம் விளைவிக்காத ஒரு வகை தேனீக்கள்.( 'ஸ்டிங்லெஸ் தேனீக்கள்' ) மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேனடையில் கை  வைத்தாலும்கொட்டி துன்பம் விளைவிக்காத ஒரு வகை தேனீக்கள்.( 'ஸ்டிங்லெஸ் தேனீக்கள்' ) மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்.

 உலக அளவில் சுமார் 600 வகையான தேனீக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது தான் சேகரித்தமதிப்பு மிக்க தேனை எடுத்தாலும், தேனை எடுக்கும் நபரை கொட்டி துன்பம்விளைவிக்காத ஒரு வகை தேனீக்கள் உள்ளன. இந்த வகை தேனீக்கள் 'ஸ்டிங்லெஸ்தேனீக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 

உயிரியல் ரீதியாக இவை 'மெலிபோனா' தேனீக்கள் என்ற பெயரில் அழைக்கப்படு கின்றன.. இவற்றில் மிகவும் மென்மையான மற்றும் மிகுந்த அறிவுள்ள ஒன்றாக இந்த மெலிபோனா தேனீக்கள் குறிப்பிடப்படுகின்றன. மற்ற சாதாரண தேனீக்கள் நீள் வட்ட வடிவில் தேனடைகளை கட்டுகின்றன. ஆனால் இந்த தேனீக்கள் சுருள் வடிவ தேனடையை கட்டுகின்றன. இதுவொரு தனித்துவமான தேனடை வடிவமைப்பு என்று கருதப்படுகிறது. அதே வேளையில் இந்த தேனீக்கள் சேகரிக்கும் தேன் மற்ற சாதாரண தேனீக்கள் சேகரிக்கும் தேனை விட அரிதான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்த தேனீக்கள் பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவமான தேனீக்கள் என்பதால், இவை சேகரிக்கும் தேனில் தனித்த மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தேனீக்கள் கொட்டும் போது மயக்கம் அல்லது வேறு எந்த பாதிப் பும் ஏற்படுவதில்லை. இதன் காரணமாகவே இவை கொடுக்கு இல்லாத ஸ்டிங்லெஸ் தேனீக்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

இந்த மெலி போனா தேனீக்கள் சேகரிக்கும் தேனை உண்ணும் போது மனிதர்களின் இதயம் வலு பெறுவதுடன், இதயம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் சுவாச மண்டல நோய்கள் நீங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த தேன் உலக அளவில் மிகவும்மதிப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News