9TH APRIL விளையாட்டு போட்டிகள் .
துப்பாக்கி சுடுதல்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் அர்ஜென்டினாவில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது.
ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர், தகுதிச் சுற்றில் 13வது இடம் பிடித்து வெளியேறினார். டாப் '-10' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சீன வீராங்கனைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்
244.6 புள்ளி எடுத்த இவர், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சீனாவின் வெய் குயான்(241.9), ரான்ஜின் ஜியாங்(211.0)வெள்ளி,வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாட்மின்டன்
ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் சீனாவில் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா - துருவ் ஜோடி வெற்றி பெற்றது.
சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் 42வது சீசன் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, 15-21, 21-12, 21-11 ஹூ பங்ரான், செங்சு இன்ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியா வின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி,21..9..,21..11 என இலங்கையின் துலித், பாஞ்சாலி ஜோடியை
வென்றது.
0
Leave a Reply