25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை  பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை,

பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.

24.04.2026 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.

காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஜோதிக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி ) 'ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.

காலை 7.45 மணிக்கு தென்காசி சாலையில் உள்ள அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 

24-04-2026 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ ரித்விக் ராஜா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி,

இடம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமி ராஜா அரங்கம், இராஜபாளையம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News