25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அதானியின் APSEZ நிறுவனத்தின் நிகர லாபம் ₹3,120 கோடியாக அதிகரிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதானியின் APSEZ நிறுவனத்தின் நிகர லாபம் ₹3,120 கோடியாக அதிகரிப்பு.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ₹5,550 கோடிEBITDA ஈட்டியுள்ளது. மேலும், அது கடந்தாண்டு உடன் ஒப்பிடும்போது27% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் துறைகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.2026 நிதியாண்டின் முதல் பாதியில், உள்நாட்டுத் துறைமுகங்கள் அதிகபட்சமாக 74.2% EBITDAவை பதிவு செய்துள்ளது. அதேபோல பன்னாட்டுத் துறைமுக ஆபரேஷனும் ₹2,050 கோடி வருவாயையும், ₹466 கோடி EBITDAவை எட்டியுள்ளன. இது வாழ்நாள் சாதனையாகும்.

லாஜிஸ்டிக்ஸ் பிரிவில், 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹2,224 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 92% வளர்ச்சியாகும். கடல்சார் துறையில்,2026 நிதியாண்டின் முதல் பாதியில்₹1,182 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட213% அதிகமாகும்.. புதிய கப்பல்கள் வாங்கியதே இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக ஃபின்ச் மற்றும் எஸ் & பி குளோபல் APSEZஇன் ரேட்டிங்கை மேம்படுத்தி வழங்கியுள்ளது. Fitch Ratings "நெகட்டிவ்" என்பதில் இருந்து "ஸ்டேபிள்" என மாற்றியுள்ளதுடன்,"BBB-" மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.S&PGlobal, சர்வதேச போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவனங்களில் APSEZஐ முதல் 5% பட்டியலில் அங்கீகரித்துள்ளது.

APSEZ இன் ஒருங்கிணைந்த போக்குவரத்துப் பயன்பாட்டு லாபகரமான வளர்ச்சி ஒரு சான்றாக இருப்பதாக அதன் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஸ்வினி குப்தா தெரிவித்தார்.APSEZ கடந்த செப்டம்பர்30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகளை அறிவித்திருந்தது. அதில் தான் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அஸ்வினி குப்தா மேலும் கூறுகையில்,"லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் வணிகங்கள் தொடர்ந்து அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன, இது எங்கள் சேவையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த லாபம் எங்கள் செயல்பாட்டிற்கான ஒரு சான்று. இதுவரை இல்லாதEBITDAஐ பதிவு செய்து சாதனை படைத்துள்ளோம்.12 லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள்,3.1 மில்லியன் சதுர அடி கிடங்குகள், விரிவடைந்து வரும் சரக்கு சேவை போக்குவரத்து என எங்கள் விஷனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இது சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைந்த வீரராக எங்களை நிலைநிறுத்துகிறது" என்றார்.

முந்திரா துறைமுகம் இந்தியா மரிடைம் விருதுகளில்"சிறந்த தனியார் துறைமுக மற்றும் ஆண்டின் சிறந்த கொள்கலன் முனையம்" விருதை வென்றது. இந்தியா மரிடைம் வாரத்தில்"கடல்சார் சாதனையாளர்கள்" பிரிவில்"துறைமுக முன்னோடி"விருதைAPSEZ வென்றது. ஓஷன் ஸ்பார்க்கிள் நிறுவனத்திற்கு"மின்னிலக்க நௌகிக் டெக் டிரான்ஸ்ஃபர்மேஷன் விருது"வழங்கப்பட்டது. தாமரா துறைமுகம் ஒடிசா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால்"மாசு கட்டுப்பாட்டு பாராட்டு விருது" பெற்றது. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் உச்சிமாநாட்டில்"சிறந்த துறைமுகச் சேவை வழங்கும் நிறுவனம்"மற்றும்"லாஜிஸ்டிக்ஸ் சாம்பியன்" விருதுகளை வென்றது. கங்காவரம் துறைமுகத்திற்கு"சுற்றுச்சூழல் பாதுகாப்பு" விருது, விழிஞ்சம் துறைமுகத்திற்கு"மாசுக்கட்டுப்பாட்டு இயந்திர உபகரணங்கள்" விருது மற்றும் தாமரா துறைமுகத்திற்கு "கழிவு குறைப்பு" விருதுகள் வழங்கப்பட்டன.. கோவா துறைமுகத்திற்கு Apex India Green Leaf Awards அமைப்பு "டயமண்ட் விருது" பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News