25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவர்களுக்கும்  “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 14.11.2024  அன்று நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், மேனாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப.,  (ஓய்வு)  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.மேலும் இந்நிகழ்ச்சியானது, காலை 09.00 மணி முதல் 12.45 மணி வரை மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில்,  மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News