25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 24.06.2025 அன்று விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.  

1. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்
2. ஆதார் அட்டையில்  திருத்தம் மேற்கொள்ளுதல்
3. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்
4. ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்
5. வாக்காளர் அட்டை வழங்குதல்
6. குடும்ப அட்டை வழங்குதல்
7. சுயதொழில் தொடங்க மானியம் தொகை/ பயிற்சி  வழங்குதல்
8. இலவச தையல் இயந்திரம் வழங்குதல்
9. கல்வி உதவித் தொகை வழங்குதல்
10. 40-வயதிற்கு மேல் உள்ள திருநங்கைகளுக்கு  ஓய்வூதியம் வழங்குதல்
மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News