25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எகிறிய பட்ஜெட் கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எகிறிய பட்ஜெட் கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவா

 .சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யாவின் கங்குவா படம் உருவாகி வருகிறது.3d அனிமேஷனில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில்250 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நாளுக்கு நாள் பட்ஜெட் எகிறி கொண்டே போகிறதாம். இதனால் தயாரிப்பாளரை கதிகலங்க வைத்திருக்கிறார் சிறுத்தை சிவா.. இந்த சூழலில் சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவிற்கு சிறுத்தை சிவாவின் கங்குவா பட பட்ஜெட் அதிகமாகியுள்ளது. முதலில் 250 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது500 கோடி பட்ஜெட்டை நெருங்க இருக்கிறதாம். இப்படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் பாதி முடிந்த நிலையில், இப்போது மீதி உள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு வெளிநாடு சென்று இருக்கிறதாம்.

கங்குவா படம் ஹிஸ்டாரிக்கல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்போது ஒரு தீவு பகுதியில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதற்காக படக்குழு தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் இங்கும் பல கோடிகள் செலவாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இப்போது தயாரிப்பாளருக்கு சிறு கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனாலும் சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போட்ட பட்ஜெட்டை விட கண்டிப்பாக பல மடங்கு வசூலை பெரும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளருக்கு சிறுத்தை சிவா கொடுத்திருக்கிறாராம். அந்த தைரியத்தில் தான் தயாரிப்பாளரும் கங்குவா படத்திற்கு செலவு செய்து வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News