25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  (16.06.2026) அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சிவகாசி மாநகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் இரு தளங்களுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கும் கட்டுமான பணிகளையும்,2022-2023 சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், மாநகராட்சி அலுவலகக் கட்டுமான பணிகளையும்,6-வது மாநில நிதிக் குழு (SFC) நிதியின் கீழ், ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான கூடுதல் கட்டுமான பணிகளையும்,15-வது மத்திய நிதிக் குழு (CFC) நிபந்தனையற்ற மானியத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணிகளையும்,சிவகாசி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாநகர நகர் சுகாதார அலுவலர் திருமதி ஸ்ரீதேவி, மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News