விம்பிள்டன் டென்னிஸ்: 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் வில்லியம்ஸ் சகோதரிகள்!
லண்டனில் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் நட்சத்திர சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் (46) மற்றும் செரினா வில்லியம்ஸ் (44) ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் களம் இறங்குகிறது. இதற்காக இவர்களுக்கு சிறப்பு அனுமதி (Wild Card) வழங்கப்பட்டுள்ளது.
சாதனை ஜோடி: ஒற்றையர் பிரிவில் செரினா 23 பட்டங்களையும், வீனஸ் 7 பட்டங்களையும் வென்றுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அள்ளியுள்ளனர்.
மீண்டும் கம்பேக்: கடைசியாக 2022 யு.எஸ். ஓபனில் விளையாடிய இந்த ஜோடி, தற்போது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விம்பிள்டன் இரட்டையர் களத்தில் ஒன்றாக இணையப் போகிறது.
ஓய்வு முடிவை மாற்றிக்கொண்ட செரினா வில்லியம்ஸ், கடந்த வாரம் நடந்த குயின்ஸ் கிளப் தொடரின் மூலம் டென்னிஸ் களத்திற்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply