ஸ்மிருதி மந்தனாவுக்கு கவுரவம்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகிறது டைம் இதழ். இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசியல், அறிவியல், கலை உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் உலகின் 'டாப் -100' நபர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த வரிசையில் விளையாட்டு பிரிவில் நட்சத்திரங்கள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29, இடம் பெற்றுள்ளார்.
இப்பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு நட்சத்திரம் ஆனார். உள்ளூர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட், ஒருநாள், 'டி-20' என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை, பெண்கள்
கிரிக்கெட்டில் அதிக சதம் (17) அடித்தவர், சர்வதேச அரங்கில் ஒரே ஆண்டில் 1000 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் வீராங்கனை என சாதித்துள்ளார்.
0
Leave a Reply