25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு செய்திகள்.JULY  16 th 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு செய்திகள்.JULY 16 th 2026

ஸ்குவாஷ்:
சென்னையில் நடைபெற்ற சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஜோகிம் சுவா, எகிப்தின் அதாம் ரோஷ்டியை 12-10, 11-7, 11-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்தின் ரூகையா, தென் கொரியாவின் ஹவாயோங் இயம்மை 11-6, 10-12, 19-21, 11-7, 11-8 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

பாட்மின்டன்:
அனைத்து இந்திய சீனியர் ரேங்கிங் பாட்மின்டன் தொடர் இன்று சென்னைில் தொடங்குகிறது. 2021க்குப் பிறகு இந்தப் போட்டி மீண்டும் சென்னைில் நடைபெறுகிறது. தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 23-ம் தேதி நடைபெற உள்ளது.

டி-20 கிரிக்கெட்:
புலவாயோவில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 170/6 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 19 ஓவரில் 138 ரன்களுக்கு சுருண்டதால், ஜிம்பாப்வே 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜூனியர் ஹாக்கி:
செப்டம்பர் 4 முதல் 13 வரை சீனாவில் நடைபெறும் பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான தயாரிப்பில் இந்திய அணி இங்கிலாந்தில் 7 பயிற்சி போட்டிகளில் விளையாடியது. இதில் 3 வெற்றியும், 4 தோல்வியும் பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News